அம்மா உணவகம்.. முதல்வரைப் பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனம் இல்லையே.. மேயர் பிரியா

Jul 20, 2024,05:48 PM IST

சென்னை:  அம்மா உணவங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனம் இல்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறியுள்ளார்.


கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது அம்மா உணவகங்கள். இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை தரப்படுகிறது. இதனால் ஏழை எளிய, கூலித் தொழிலாளர்களின் மனம் கவர்ந்த உணவகமாக இது விளங்குகிறது.


திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த உணவகங்களை மூடப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று சென்னையில் அம்மா உணவகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு நடத்தினார். காலை உணவை சாப்பிட்டுப் பார்த்தார்.




பின்னர் அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்துவதற்காக ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். புதிய பாத்திரங்கள் வாங்கவும் உத்தரவிட்டார். இந்த  ஆய்வுக்கு அதிமுக தரப்பிலிருந்து விமர்சனம் வந்துள்ளது. முதல்வரின் ஆய்வு தாமதமானது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருந்தார். அதேபோல முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்துள்ளார்.


இதற்கு பதிலளித்து சென்னை மேயர் பிரியா ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!


கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்கள்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.


திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் என்று சாடியுள்ளார் மேயர் பிரியா ராஜன்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்