சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுத் தொல்லை இதுவரை இல்லாத நிலையில் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொசுக்கடியால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், நோய்களும் பரவும் என்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கேற்ப சென்னையில் காய்ச்சலும் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொசு மருந்து அடிப்பது, சாக்கடைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை சுத்தம் செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
Jokes: என்ன இது.. சாம்பார்ல ஒரே சில்லறையா கிடக்குது!
இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டமானது மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}