- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள மிச்சாங் புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீவிரமடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3ம் தேதி புயலாக உருவாகும். இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை:
டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை ,ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டாவுக்கு கன மழை
டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ,ஆகிய மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
கனமழை காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் 14 கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பு கருதி கடிதம் அனுப்பி உள்ளார். இக்கடிதத்தில் அவர் புயல் குறித்தும் ,மழை நீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்யவும், 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .
தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
இந்நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் உத்தரவின்படி,மக்களின் பாதுகாப்பு கருதி மீட்பு படையினர் நாகை மாவட்டத்திற்கு விரைந்தனர். மேலும் 27 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர் மூழ்கி பம்புகள் ,உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
தங்கம் வாங்க இதுவே தங்கமான நேரம்... தொடர் குறைவில் தங்கம் விலை!
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}