சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டடுள்ளது.
இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடந்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்த சாகச நிகழ்ச்சி நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. விமானப்படையின் இந்த பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சிக்கு எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம்.
இந்த சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. இந்த விமாக சாகசத்தை இந்திய விமானப்படையின் எலைட் அணிகள் நிகழ்த்த உள்ளன. இந்த சாகச நிகழ்ச்சியில் பல்வேறுபட்ட விமானங்கள் பங்கேற்க உள்ளன. இதை காண சென்னை மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மக்களும் சென்னை மெரினாவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட சென்னை மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்காக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் :
*காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
*பஸ் இல்லாத வாகன ஓட்டிகள், பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர் கே சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்தலாம்.
* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிசை நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பாரிசில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அண்ணா சிலையிலிருந்து மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, ரத்தன கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர் கே சாலை, வி எம் தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
* வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர் கே சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}