மதுரை போகும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி தேஜாஸ் தாம்பரத்திலும் நின்று செல்லும்!

Feb 25, 2023,09:20 AM IST
சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மதுரை இடையிலான விரைவு ரயில்தான் தேஜாஸ். சென்னையிலிருந்து தினசரி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இடையில் திருச்சி, கொடைரோடு ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்.



அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து 3 மணிக்குக் கிளம்பி, சென்னை எழும்பூர் சந்திப்பை 9.30 மணிக்கு வந்தடையும்.  இடையில் கொடைக்கானல் ரோடு மற்றும் திருச்சியில் மட்டும் ரயில் நிற்கும்.

இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ரயில்வே இதைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதுதொடர்பாக தொடர்ந்து  முயற்சித்து வந்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தும் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.




இந்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.  சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் தாம்பரத்தில் இந்த ரயில் நிற்கும்.

இதுகுறித்து டிவீட் போட்டுள்ள சு.வெங்கடேசன், தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். ரயில்வே அமைச்சரிடம் நேரில் பல முறை வலியுறுத்தினேன். இன்று வெற்றி கிட்டியுள்ளது. அமைச்சர்
@AshwiniVaishnaw க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிறப்பான செய்திதான். அப்படியே இன்னொரு மக்கள் கோரிக்கையையும் ரயில்வே அமைச்சகம் கவனிக்க வேண்டும். தேஜாஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உணவு குறித்து பெரும்பாலான பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். காரணம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் ஸ்னாக்ஸ் அதிக அளவில் தரப்படுகிறது. வயிறும், மனசும் நிறையும் படியான தமிழ்நாட்டு உணவு வகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தரமான, தமிழ்நாட்டு உணவைத் தருவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதையும் ரயில்வே நிர்வாகம் கவனித்தால் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்