Chennai Lakes.. தொடர்ந்து பெய்த கன மழை எதிரொலி.. சென்னை ஏரிகளின் நீர் இருப்பு ஓ.கேதான்!

Dec 14, 2024,07:03 PM IST

சென்னை: தற்போது உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தால்  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணைகளும் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. 


இதற்கிடையே நாளை மீண்டும் தெற்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மீதமுள்ள அணைகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் செயல்பட்டு வருகின்றன. அதில்  கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின்  தீவிரத்தால் சென்னைக்கு குடிநீர்  வழங்கும் ஏரிகளின் நீர் இருப்புகள் அதிகரித்து வருகிறது. 




சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:


பூண்டி நீர்த்தேக்கம்:



மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 34.66 அடி (3034 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு  10,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 16,527 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 19.72அடி (2956 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு வரும் 709 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 7.85 அடி (305 மில்லியன் கன அடி)

ஏரிக்கு 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.76(3315 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு 200450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 4633 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 31.95 அடி ( 353 மில்லியன் கன அடி)

தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது 250 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்