Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!

Dec 04, 2024,05:59 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9246 கன அடியிலிருந்து 32,240 கன அடியாக அதிகரித்து வருகிறது. அதேபோல சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர் இருப்பு திருப்திகரமாக உயர்ந்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. 

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையில் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய நீர் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 7,248 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு பின்வருமாறு:


பூண்டி:




3231 கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது  1,211 மி.கன அடி நீர்  இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3,440 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 27 கன அடி வெளியேற்றப்படுகிறது. 


சோழவரம்:


1081 மி.கன அடி மொத்த கொள்ளளவான சோழபுரம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 157 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 223 கன அடியாக வருகிறது. 


புழல்:


3,300 மி.கன அடி மொத்த கொள்ளளவான புழல் ஏரியில் தற்போது, நீர் இருப்பு 2,763 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 730 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 209 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 


கண்ணன்கோட்டை :


ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் தற்போது நீர் இருப்பு 325 மி.கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடி வருகிறது. 


செம்பரம்பாக்கம் ஏரி:


3,645 மி.கன அடி மொத்த கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,792 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 751 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில்,  வினாடிக்கு 102 கன அடி தண்ணீர்  திறக்கப்படுகிறது.  


மேட்டூர் அணை:


ஃபெஞ்சல் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.  


120  அடி மொத்த கொள்ளளவான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.21 அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9246 கன அடியிலிருந்து 32,240 கன அடியாக அதிகரித்துக் காணப்பட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்