சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. சோழவரம் ஏறியில் மட்டுமே நீர் மட்டம் குறைவாக உள்ளது.
தற்போதும் ஏரிகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேற்று வரை 34 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு நன்றாக உயர்ந்தது.
தற்போது டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்து வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.
குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள்,போன்ற நீர்நிலைகளின் நீர் இருப்பு குறையாமல் நீடித்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பும் உயர்ந்துள்ளது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என மொத்தம் 90 அணைகள் உள்ளன . இதில் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், தேர்வாய் கண்டிகை, போன்ற ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 34.67அடி (3038 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 1090 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 817 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 19.43அடி (2898 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 6.09 அடி (235 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லை ஆனால் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.18(3167 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 35.10 அடி ( 449 மில்லியன் கன அடி)
தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது நீர் வரத்து இல்லை. வெளியேற்றப்படுவதும் இல்லை.
வீராணம்:
மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 15.25 அடி ( 1380 மில்லியன் கன அடி)
வீராணம் ஏரிக்கு தற்போது 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை நீர் மட்டம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 2701 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் டெல்டா பாசனத்திற்காக 503 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 119.41 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 92.534 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமெரிக்க வருமான வரியில் மாற்றம் : டிரம்ப்பின் புதிய நடவடிக்கையால் மக்கள் கலக்கம்
ஏன் தேவை மாநில சுயாட்சிக் குழு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து கடிதம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
{{comments.comment}}