Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

Nov 21, 2024,12:13 PM IST

சென்னை: காற்று சுழற்சியால் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மிதமான காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் நீர் இருப்பில் மிகப்பெரிய மாற்றம் இல்லை. ஆனால் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் மற்றும் அணிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நாளை மறுநாள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழை வரை செய்யக் கூடும் என்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு:




120 மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.  இன்று காலை 8 மணி நிலவரம் படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9269 கன அடியில் இருந்து தற்போது 8,355 கன அடியாக குறைந்துள்ளது.  நீர்மட்டம் 108.32 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து கிழக்கு  மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 


இந்த நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம் ,தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறித்த விவரத்தைப் பார்ப்போம்.


பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய  6 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 13.21 டிஎம்சி ஆகும்.  ஒரு சில ஏரிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தும், ஒரு சில ஏரிகளில் சற்று குறைந்தும் நீர் இருப்பு உள்ளது.




பூண்டி நீர்த்தேக்கம்:


மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.47 அடி (511 மில்லியன் கன அடி)


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 16.79 அடி (2367 மில்லியன் கன அடி)


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 2.38 அடி (115 மில்லியன் கன அடி)


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 17.61 (2050 மில்லியன் கன அடி)


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 30.41 அடி ( 306 மில்லியன் கன அடி)


வீராணம்:


மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 13.30 அடி ( 914 மில்லியன் கன அடி)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்