வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

Apr 10, 2025,11:27 AM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் உருவான காற்று சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது.  தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வெயில் அடித்தாலும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 




இந்த நிலையில் வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை நிலவிவரும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டம் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 


வெயில் நிலவரம்:


அதே சமயத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்