பிளாக்கிங் ஸ்டைலுக்கு மாறிய Chennai IMD.. இது வேற லெவல் மாற்றமா இருக்கே.. சூப்பர்!

Jan 07, 2024,01:54 PM IST

சென்னை:  வழக்கமான வானிலை அறிவிப்பு பாணியிலிருந்து சற்று மாறி வித்தியாசமான முறையில் முன்னறிவிப்புகளை தனது டிவிட்டர் தளத்தில் போட ஆரம்பித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.


வானிலை முன்னறிவிப்பு என்பது முன்பெல்லாம் சென்னை வானிலை மையம் கொடுப்பது மட்டுமே. டிவி சானல்கள் வந்த பிறகு, வானிலை மைய இயக்குநர்கள் வானிலை அறிவிப்புகளை பேட்டிகளாக கொடுக்க ஆரம்பித்தபோதுதான் இது மக்களைக் கவர ஆரம்பித்தது. அதிலும், ரமணன் காலத்தில்தான் இது மிகப் பிரபலமானது.


ரமணன் பேட்டி அளிக்கும்போது, நிறுத்தி நிதானமாக பயன்படுத்தும் வார்த்தைகள் மக்களிடையே பிரபலமாயின. அவரது கணிப்புகள் பல சமயத்தில் சரியாக இருந்தது. சில சமயங்களில் சொதப்பும். இருந்தாலும் ரமணன் பேச ஆரம்பித்தால் அதைக் கவனிக்கும் ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டது அந்த சமயத்தில்தான். 




ஆனால் தனியார் பிளாக்கர்கள் வந்த பிறகு வானிலை முன்னறிவிப்பு மற்றும் கணிப்பு வேற லெவலுக்கு மாறி விட்டது. இதில் முன்னோடி என்றால் அது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்தான். அவரது கணிப்புகள் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்பதும், எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் ஜாலியாக சொல்வதும், மக்களை பயமுறுத்தாமல் அதேசமயம், என்ன நடக்கலாம் என்பதையும் துல்லியமாக சொல்லும் அவரது பாணியும் அவருக்கு  ரசிகர் கூட்டத்தையே ஏற்படுத்தி விட்டது.


இன்று நிறைய தனியார் பிளாக்கர்கள் வந்து விட்டார்கள். எல்லோரும் ஒவ்வொரு பாணியில் கலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி பெரும் மழை தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இந்திய வானிலை மையத்தின் செயல்பாடுகளை பல அரசியல் தலைவர்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர். அவர்களின் கணிப்புகள் இன்னும் துல்லியமாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற வேண்டும் என்று பலரும் கூறினர்.


இப்படிப்பட்ட நிலையில் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடும் வானிலை அறிவிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். வழக்கமாக பிளாக்கர்கள் பயன்படுத்துவது போன்ற வார்த்தைகளையும், டீட்டெய்லையும் சொல்லி போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் உள்ளதால் வரவேற்பும் கிடைத்துள்ளது.


குறிப்பாக இப்படி ஒரு டிவீட் போட்டிருந்தனர்.. அதில், " large band of rain approaching Chennai and neighbouring coastal districts. widespread light to moderate spells with isolated Intense spell (South Chennai) of rain is expected" என்று இடம் பெற்றிருந்தது. இதுபோல வெல்லாம் வழக்கமாக பிளாக்கர்கள்தான் எழுதுவார்கள். ஆனால் ஐஎம்டி போட்டுள்ள இந்த டிவீட் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.


நிச்சயம் இந்த மாற்றத்தை வரவேற்றாக வேண்டும். இப்படி விரிவாக, தெளிவாக சொல்லும்போது மக்களுக்கு தெளிவாகப் புரியும் வாய்ப்பு கிடைக்கிறது. நமக்கு மேலே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள ஒரு சான்ஸ் கிடைக்கிறது. அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டுதான் தனியார் பிளாக்கர்களும் சிம்பிளாக சொல்கின்றனர். இதனால்தான் அவர்களது கணிப்புகளுக்கும், கூற்றுக்கும் மக்கள் அதிக கவனம் கொடுக்கிறார்கள்.


சென்னை வானிலை மையம் மிக மிக நவீனமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயம், இது போல மக்களுக்கேற்ற வகையில் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்