இரண்டு பேரும் சமரசம் பேசுங்க.. ஜெயம் ரவி, ஆர்த்தி ரவிக்கு.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

Nov 15, 2024,01:49 PM IST

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகளிடையே சமரசம் பேச குடும்ப நல நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை தந்து  தனது நடிப்பின் திறமையால் தனக்கென்ற தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டு அனைத்து தரப்பு மக்களிடையும் பாராட்டைப் பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு  ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 




இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி செப்டம்பர் ஒன்பதாம் தேதி மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவியது. ஆனால் ஆர்த்தி ஜெயம் ரவி தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இருப்பினும் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்து, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு வழக்கு தொடர்ந்தார். 


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  சமரச மையத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குடும்ப நல நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆர்த்தி - ஜெயம் ரவி தம்பதி இருவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவரா நீங்கள்.. டெலிகிராம் சேனல் வந்தாச்சு.. சூப்பர் நியூஸ்!

news

சொல்லி விட்டு ஓய்வெடுப்பன் அல்ல நான்.. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. முதல்வர் ஸ்டாலின்

news

இரண்டு பேரும் சமரசம் பேசுங்க.. ஜெயம் ரவி, ஆர்த்தி ரவிக்கு.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

news

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்.. நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட அதிமுக கோரிக்கை!

news

சென்னை குன்றத்தூரில் நடந்த விபரீதம்.. பரிதாபமாக பறி போன 2 உயிர்கள்.. எலி மருந்து இவ்வளவு கொடூரமானதா?

news

Gold Rate.. சரிந்து வந்த தங்கம் இன்று உயர்ந்தது.. சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

news

ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் 2024 : சிவனை இப்படி வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

news

இலங்கை நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது.. ஜனாதிபதி அனுரா திசநாயக்கேவின் கட்சி.. 123 இடங்களில் வெற்றி!

அதிகம் பார்க்கும் செய்திகள்