- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை ராயபுரத்தில் 28 பேரை சரமாரியாக கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாய் கடித்த அத்தனை பேருக்கும் ஆளுக்கு 5 தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இது ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில்தான் மக்களுக்கு பெரும் அவதியாக இருக்கிறது. பக்கத்து தெரு, கடைகளுக்கு கூட போக முடியாத வகையில் தெரு நாய்கள் வழிப்பறி திருடர்கள் தான் வந்துவிட்டனரோ என்பது போல தாக்குகின்றன.
பகலிலும் கூட பல தனிமையான தெருக்களுக்குள் போய் விட்டால் நாய்கள் முற்றுகையிட்டு கடிக்க வருகின்றன. பலரை கடிக்கவும் செய்கின்றன. இதனால் பள்ளி மாணவ- மாணவியர்கள் தெருவில் நடந்து போவதற்கு கூட அஞ்சி நடுங்குகின்றனர். ஒரு பக்கம் நாய்த் தொல்லை, மறுபக்கம் மாடுகள் தொல்லை என்று மக்கள் அவதியுறும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை ராயபுரத்தில் தெரு நாய் ஒன்று பொதுமக்கள், மாணவர்கள் என 28 பேரை கடித்து குதறியது. அந்த நாயை அத்தெருவைச் சேர்ந்த பலரும் கூடி அடித்துக் கொன்று விட்டனர். நாய் கடித்த இருபத்தி எட்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரையும் நாய் கடித்துக் குதறியதால் அதற்கு ஏதேனும் தொற்று பாதிப்பு இருக்கக் கூடும் என்பதால், நாய்க்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தற்போது நாய் கடித்த 28 பேருக்கும் ஆளுக்கு 5 தடுப்பூசி போடப்படவுள்ளது.
நாய்களுக்கு தடுப்பூசி
இதற்கிடையே, சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் 16 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல நடபாண்டிலும் 17,813 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் இப்போது வரை பிடிக்கப்பட்ட நாய்கள் அனைத்திற்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாய்கள், மாடுகளின் பெருக்கம் முன்பை விட இப்போது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மனிதர்களுக்குப் பல்வேறு வகையிலும் பிரச்சினைகள் உருவாகின்றன. இதுகுறித்த நிரந்தரத் தீர்வு காண, பொதுமக்கள், சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர் கூடி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பள்ளி செல்லும் மாணவர்கள், பெண்கள், தெருவில் நடந்து செல்பவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால் இதுகுறித்து விரைவான நடவடிக்கை தேவை என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}