ரயில் முன் மாணவியை தள்ளி விட்டுக் கொன்ற... குற்றவாளி சதீஷுக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு!

Dec 30, 2024,06:11 PM IST

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 




சென்னை  பரங்கிமலை காவலர் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். சதீஷின் காதலுக்கு சத்யபிரியா சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, சத்யபிரியா கல்லூரிக்குச் செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, சதீஷூம் அங்கு வந்துள்ளார். அப்போது தன்னை  காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா தொடர்ந்து  மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரயில் மோதி சத்யபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். 


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி  கடந்த 27தேதி  தீர்ப்பளித்தார். சதீஷை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, சதீஷூக்கான தண்டணை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.


அதன்படி, இன்று கொலையாளி சதீஷுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  3 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் உறுதி அளித்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

news

Khel Ratna Awards 2025.. டி. குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

news

உட்கட்சிப் பிரச்சினை சரியாகி விட்டது.. இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் தான்.. டாக்டர் ராமதாஸ்

news

கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணில் இல்லை.. மனசில்.. கவிஞர் வைரமுத்து

news

அரசுப் பள்ளிகளில் தனியார்: அண்ணாமலை அறிக்கை.. அன்பில் மகேஷ் மறுப்பு.. தனியார் பள்ளிகளின் விளக்கம்!

news

தடையை மீறி போராட்டத்தில் குதித்த.. சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள்.. கூண்டோடு கைது

news

Tirupati.. 2024ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த.. 2.25 கோடி பக்தர்கள்!

news

ஊட்டியே சென்னையில் இறங்கியது போல்.. ஜில் ஜில் மலர்கள்.. ஜிகுபுகு ரயில்.. தொடங்கியது flower show!

news

மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அதிகம் பார்க்கும் செய்திகள்