"ஏய்ய் பிடி பிடி".. வளைத்து வளைத்து மாடு பிடிக்கும்.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

Oct 19, 2023,02:39 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் தெருக்களில் மாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள், விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளைப் பிடிக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு விபரீதங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளன. மாடுகள் திடீரென மிரண்டு ஓடுவதாலும், முட்டுவதாலும், துரத்துவதாலும் சாலையில் தெருக்களில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



மாடுகளை தெழுவத்தில் கட்டி வைக்காமல் தெருவில் விடுவது. வீட்டில் வளர்க்கும் நாய்களையும் தெருக்களில் சுற்றித்திரிய விடுவது போன்றவற்றால்  அபாயம் அதிகம் இருப்பதை உணராமல் சிலர் கால்நடைகளை தெருக்களில் விடுகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு என்ன கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கால் நடை வளர்ப்பாளர்கள் அவற்றை பொருட்படுத்துவதே கிடையாது. 

கெஞ்சம் நாட்களுக்கு முன்னர் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த சிறுமியை மேயர் பிரியா வீட்டுக்கே போய் சந்தித்து ஆறுதல் கூறி சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்து விட்டு வந்தார். 

இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி சம்பவம் மனதிலிருந்து மறைவதற்குள் திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று ஒரு முதியவரை மாடு தூக்கிப் போட்டு காயப்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாடு என்று தெரிய வந்துள்ளது. இதனால் யார் மீது கேஸ் போடுவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ஒழுங்காக தடுப்பு ஊசி போடாததினால் எத்தனை பேர் அவற்றின் கடியில் சிக்கி ரேபிஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.  நாய்த் தொல்லையுடன் இப்போது இந்த மாட்டுத் தொல்லையும் சேர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. 

இத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அடைத்து வைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர். தினசரி சாலைகள், தெருக்களில் திரியும் மாடுகளை அவர்கள் பிடித்து வருகின்றனர்.  நேற்று ஒரே நாளில் 14 மாடுகள் பிடிபட்டன. அவற்றை முகாம்களில் கொண்டு போய் அடைத்தனர். சாலைகள், தெருக்களில் திரிய விடாமல் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் முறையாக கட்டிப்போட்டு வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்