சென்னை: சென்னையில் தொடர்ந்து சிறுவர்களை நாய் கடித்த சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆபத்து விளைவிக்கும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரிய விட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் பூங்காவில் காவலராக பணியாற்றும் ரகுவின் மகள் சுதக்ஷா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராட்வெய்லர் நாய்கள் ரகுவின் மகளை கடித்து குதறியது. இதனை தடுக்க முயன்ற ரகுவின் மனைவி சோனியாவையும் கடித்தது. அந்த சமயத்தில் நாயின் உரிமையாளர் நாயை கட்டுப்படுத்த முயன்று அவரால் முடியவில்லை. தப்பித்து ஓடிவிட்டார்.
நாய் கடித்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாய் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த விசாரணையில் நாய் வளர்ப்பு உரிமத்தை புகழேந்தி பெறவில்லை என்பது தெரிய வந்தது.
அதேபோல் நேற்று மீண்டும் சென்னை வேளச்சேரியில் நாய் கடித்த மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோடை விடுமுறைக்காக ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்குச் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன் சென்றான். நேற்று மாலை விளையாடிக் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது சைபீரியன் ஹஸ்கி வகை நாய் ஒன்று திடீரென சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்தான். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவனுடைய பெற்றோர்கள் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னையில் நாய் கடித்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆபத்து விளைவிக்கும் வகையில் நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், மற்றும் பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரியவிட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}