சென்னை: மே மாதம் வெப்ப அலை இன்னும் அதிகமாக இருக்கும் என அறிவித்த நிலையில், மக்கள் வெயில் காலத்தை சமாளிக்க மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதிகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தவிர அக்னி நட்சத்திர காலமான மே மாதத்தில் வெப்ப அலை இன்னும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த வெயிலின் தாக்கம் ஜூன் கடைசி வரை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் நிலையில் வெப்ப அலையை சமாளிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெயில் காலத்தை சமாளிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறுகையில்,
வெயில் அதிகமாக இருக்கும் போது முடிந்தவரை நேரடி வெயிலில் இருப்பதை தவிர்த்து நிழலில் இருக்க வேண்டும்.
எனக்குத் தாகம் இல்லை, தண்ணீர் வேண்டாம், என்ற காரணங்களால் குடிதண்ணீரை தவிர்க்காமல் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.இதுதவிர பழச்சாறு, இளநீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்தான கூல்,மோர் போன்ற பானங்களை பருக வேண்டும்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நீர்ச்சத்து உள்ள ஆகாரங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வெயிலில் இருக்கும்போது தலைவலி, தலைசுற்றல், உடலில் நீர்சத்துக் குறைதல், போன்றவை ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சென்னை மாநகராட்சியில் சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 180 இடங்களில் குடிதண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
2.96 லட்சம் ஓ ஆர் எஸ் கரைசல் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளது.
75 பொது இடங்களில் தற்காலிக சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு இந்த ஓ ஆர் எஸ் கரைசல் நாளை முதல் வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் வெயில் தாக்கத்தால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க யுஎஸ்ஏ குளியல் சோப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வெயில் கால குறித்த பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்க்க 140 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 140 நகர்புற சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களிலும் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு,வெயில் காலத்தை சமாளிக்க மக்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}