ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!

Oct 07, 2024,02:52 PM IST

சென்னை:  92வது விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 


நாட்டில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது டெல்லி உட்பட பல முக்கிய விமான தளங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வருடம் மெரினா கடற்கரையில் முதன் முதலாக  விமானப்படை  சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.




இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு பாராசூட் சாகசத்துடன் தொடங்கி மதியம் 1 வரை நடைபெற்றது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது.


மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். இதையொட்டி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 


இந்த நிலையில் மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட 18.5 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக 128 தூய்மை பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும்  சுத்தப்படுத்திய பின்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவோர் முடிந்தவரை குப்பைகளை அப்படியே போடாமல் ஒரு பையில் போட்டுக் கொண்டு எடுத்து போய் குப்பைத்  தொட்டியில் போட முயல வேண்டும்.. பொறுப்பு என்பது மாநகராட்சிக்கு மட்டும் அல்ல, துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல, தூய்மைத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல.. நமக்கும் உள்ளது என்பதை எப்போதுமே மறக்கக் கூடாது மக்களே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

news

Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!

news

அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!

news

பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?

news

Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!

news

தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்

news

இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!

news

Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

news

ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்