ஓட்டுப் போட்டு கெத்து காட்ட நீங்க தயாரா.. அசத்தலான ஆக்ஷனில் குதித்த சென்னை மாநகராட்சி!

Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி பிரச்சாரத்தில் குதித்துள்ளது.


தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்களை விட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.  ஒவ்வொரு தேர்தலின்போதும் சென்னையில் பதிவாகும் வாக்குகள்தான் பேசு பொருளாக இருக்கும். சென்னையில் வாக்குப் பதிவு குறைந்து விட்டது, எப்போதும் இவர்கள் இப்படித்தான் என்ற பெயர் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.


இந்த முறை சென்னையில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி தன்னால் ஆன அனைத்து வழிகளையும் பயன்படுத்தி சிறப்பான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.




குறிப்பாக வெளியூர்க்காரர்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இப்போதே பஸ், ரயில்களில் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது மாநகராட்சி. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அது போட்டுள்ளது. அதில்,  

ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டு போட்டு உங்க கெத்த காட்ட ஊருக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா மக்களே??  என்று கூறியுள்ள மாநகராட்சி இதுதொடர்பாக சிலரிடம் எடுத்த பேட்டியையும் அதில் இணைத்துள்ளது.


அதில் பேசும் ஒரு பெண் தான் கள்ளக்குறிச்சி என்றும் கண்டிப்பாக ஓட்டுப் போடப் போவேன் என்றும் கடந்த முறை கர்ப்பம் தரித்த நிலையிலும் கூட சொந்த ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்ததாகவும் கூறுகிறார்.


என்ன மக்களே.. நீங்களும் வெளியூரா.. மறக்காமல் சொந்த ஊருக்குப் போய் கண்டிப்பாக உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற மறவாதீர்கள்.. இது உங்களுக்கு ஜனநாயகம் கொடுத்துள்ள உரிமையை. மறக்காமல் பயன்படுத்துங்க.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்