கொம்பு எப்படி இருக்கு பாருங்க.. குத்துச்சுன்னா என்னாகும்.. டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

Oct 26, 2023,05:32 PM IST

சென்னை: சென்னையில் தெருக்களில் மாடுகளை திரிய விடக் கூடாது. அப்படி திரிய விட்டால் கண்டிப்பாக அதைப் பிடிப்போம். மாடு பிடிக்கப் போகும் ஊழியர்களை வெட்டுவேன் என்று மிரட்டுகிறார்கள். அப்படி செய்தால் வழக்குத் தொடரப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மக்கள் செல்வதற்கு வழியில்லாத வகையில் சாலை தோறும் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விட மோசமாக மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தெருவில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி காயமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி மாணவியை  இரண்டு மாடுகள் கொடூரமாக குத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு முதியவர் மாடு முட்டி தூக்கி வீசப்பட்டார். சமீபத்தில் கூட இன்னொரு முதியவர் இதே பகுதியில் மாடு முட்டி காயமடைந்தார். 




இதையடுத்து சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்.


இதுதொடர்பாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:


2 வாரங்களில் பல மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. தெருவில் திரியும் மாடுகளைப் பிடிக்கிறோம். கொம்பு எப்படி பெருசா இருக்கு பாருங்க. குத்துச்சுன்னா என்னாகும். எங்களிடம் பட்டியல் உள்ளது. போலீஸ் முகவரி வாரியாக பட்டியல் தயாரித்துள்ளது. 1986 மாடுகள் இருக்கு. இதைத்தான் பிடித்து வருகிறோம். தெருவில் திரிய விடாதீங்க. கட்டி வைங்க. வண்டி வரும்போது கட்டி வச்சிருக்கீங்க. போனதும் அவிழ்த்து விட்டு விடறீங்க. அப்படிப் பண்ணாதீங்க. சிசிடிவி வச்சு பார்க்கிறோம்.


மாடு உரிமையாளர்கள் தனியாக மாடுகளை தெருவில் விடும் செயல் வேதனை அளிக்கிறது. தடை செய்யும் சட்டம் இல்லாத காரணத்தால், அவர்கள் இதுபோன்று மாடுகளை தெருவில் சுற்றித் திரிய விடுகின்றனர். அரும்பாக்கத்தில் சிறுமியை மாடுகள் தாக்கிய சம்பவம் இனியும் அரங்கேறாமல் இருக்க மாநகராட்சி முழுவதும் மாடுகளைப் பிடிக்க மாடு பிடி வீரர்கள், மாநகராட்சி குழுவினர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் என  செயல்பட்டு வருகின்றனர்.


மாதம் ஒன்றுக்கு 15 வாகனங்கள்  அடிப்படையில் 500 மாடுகளை பிடித்து இந்த ஆண்டு மட்டும் 51 லட்சம் அபதாரம் விதித்துள்ளோம். மாடுகளை வைத்திருக்க வசதி இல்லை என்றால் தயவு செய்து கால்நடைகளை வீட்டில் வளர்க்க வேண்டாம். கிராமப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும். 36க்கு 36 சதுர அடியில் இடவசதியில் இருந்தால் மட்டுமே மாடு வளர்த்துக் கொள்ளலாம். இது என்னுடைய வேண்டுகோள்.


நாங்கள் காலையில் மாடு பிடிக்க சென்றபோது மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்தால் வெட்டுவேன் என மிரட்டுகிறார்கள். தெருவில் சுற்றி தெரியும் மாடுகள் மூலம் யார்க்கேனும் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உண்டானால் தகுந்த சட்ட பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுப்போம்.  இதை எச்சரிக்கையாகவே சொல்கிரோம். மேலும் மாநகராட்சி ஊழியர்களை பணிகளை செய்ய விடாமல் தடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்