சென்னையில்.. இனி குப்பைகளை அள்ள மாட்டாங்க.. உறிஞ்சி எடுக்கப் போறாங்க.. வந்துருச்சு sucker machine!

Aug 05, 2024,06:52 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி sucker machine என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. யானையின் துதிக்கை போல இருக்கும் இந்த மெஷின், குப்பைகளை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்.


நம் நாட்டில் மனித கழிவுகளையும் குப்பைகளையும் மனிதர்களை அகற்றும் அவல நிலை நிலவி வருகிறது. இதனால் குப்பைகளை அகற்றும் மனிதர்களுக்கு கிருமித் தொட்டு ஏற்பட்டு நோய் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். ஏன் மனித கழிவுகளையும் மனிதர்களே அகற்றும் அவலநிலையும் இன்னும் நீடிக்கிறது. இதுபோன்ற சமயங்களில் விஷவாயு தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைமை கூட உருவாகி வருகிறது. இதனை தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 




குப்பை அள்ளுவர்கள் கையுறை, கால் உரை, முகக் கவசம் போன்றவற்றை பயன்படுத்தி குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும்  அரசு அறிவுறுத்தி  வருகிறது. ஆனாலும் பல பகுதிகளில் இத்தகையக பாதுகாப்பு இல்லாமல்தான் தூய்மைப் பணியாளர்கள் செயல்படும் நிலை உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஒரு அருமையான இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது சாலையோரங்களில் கொட்டும் கழிவுகளை அகற்றும் இயந்திரமாகும்.  இந்த இயந்திரத்தில் யானை தும்பிக்கை போல ஒரு நீண்ட குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதைக் கொண்டு போய் குப்பை இருக்கும் இடத்தில் வைத்து விட்டு மெஷினை ஆன் செய்தால், அந்தக் குப்பைகளை அப்படியே உறிஞ்சி எடுத்து விடுகிறது அந்த தும்பிக்கை பைப். 


குப்பைகளை அகற்றம்  பணி இதன் மூலம் எளிதாகியுள்ளது. சில விநாடிகளில் குப்பைகளை அகற்றி விட முடியும். ஆட்களும் குறைவாகத்தான் தேவை. பாதுகாப்பாகவும் இதைச் செய்ய முடிகிறது. வேலை செய்யும் நேரமும் மிக மிகக் குறைவு. அதைவிட முக்கியமாக குப்பைகைகளில் கைவைத்து பணிபுரியும் கஷ்டம், தூய்மை பணியாளர்களுக்கு கிடையாது. இந்த இயந்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


முதற்கட்டமாக இந்த இயந்திரம் சென்னையில் 12  இடங்களில் அறிமுகப்பட்டு உள்ளது. இந்த இயந்திரம் எளிதாக குப்பைகளை அகற்றுவதால், எல்லா பகுதிகளிலும் குப்பை அகற்றும் இயந்திரத்தை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். சென்னையைப் போலவே,  எல்லா மாவட்டங்களிலும் பயன்படுத்தினால் தமிழ்நாடு முழுவதும் குப்பை இல்லாத மாநிலமாக தூய்மையாக விளங்கும். குப்பை அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தும் அவல நிலை நீங்கும். குப்பைகளும் எளிதாக அகற்றலாம். 


அதேபோல மக்களுக்கும் சற்று விழிப்புணர்வு, பொறுப்புணர்வு தேவை. கண்ட இடங்களில் எல்லாம் குப்பைகளை கொட்ட கூடாது. குப்பைகளை வண்டிகள் மற்றும் குப்பை தொட்டிகளில் மட்டுமே  கொட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் இதனை கடைப்பிடித்தால் கண்டிப்பாக தமிழ்நாடு தூய்மையாக விளங்கும். ‌ இந்த விழிப்புணர்வை மக்கள் கடைபிடித்தால் ரோடுகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற பயன்படுத்தும், குப்பை அகற்றும் இயந்திரத்திற்கும் கூட வேலையில்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்