சென்னை மாநகராட்சி பட்ஜெட்:  கவுன்சிலர்கள் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைக்க திட்டம்!

Feb 21, 2024,05:42 PM IST

சென்னை: 2024-25 ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், எதிர்வரும் உடல் ரீதியான, மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கவும், மாமன்ற உறுப்பினர்களை தலைவர்களாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று இன்று தாக்கல் செய்யப்பட் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள மேலும் சில அறிவிப்புகள்:


2024 - 2025 ஆம்  கல்வி ஆண்டில் உயற் கல்வியை மேம்படுத்த தேவையான விளையாட்டு உபகரணங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும். மேலும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, சதுரங்க விளையாட்டு, போன்ற விளையாட்டுகளில் ஆறு மாதம் பயிற்சிகள் வழங்க வழங்கவும், மேற்கூறிய போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக மாணவர்களை பயிற்சியாளர் அழைத்துச் சென்று வரும் செலவினங்களுக்கு வழங்க ரூபாய் 30 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஆலோசகர்களை பணியமர்த்துதல்


வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக 10 வட்டாரங்களுக்கு தலா ஒரு ஆலோசகர் வீதம் 10ஆலோசகர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள 300 மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பாடங்களை செம்மையாக்கவும், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பாடு அடிப்படையிலான கற்றல்( activity based learning ) புதிய பாடத்திட்டங்களுடன் விலையில்லா வண்ண புத்தகங்கள் வழங்க ரூபாய் 40.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு வாசிப்பு மற்றும் கணித பயிற்சி அளித்தல்




சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் 75,793 மாணவர்கள் பயன் பெரும் வகையில், அவர்கள் தம் வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களை மொழிப்பாடங்கள் ஆகிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறன்களை வளர்க்கவும் மற்றும் கணித பாடத்தில் அடிப்படை கணித திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிகளை மேம்படுத்துவதற்காக முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆண்டு 8 உயர்நிலை மற்றும் 3 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 11 பள்ளிகளுக்கு நகலெடுக்கும் வசதியுடன் கூடிய பிரிண்டர்கள் வழங்க ரூபாய் 5.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னை பள்ளிகளிலேயே தொடர்ந்து பதினோராம் வகுப்பு பயிலும் 50 மாணவர்களை இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




2024-25 ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் முதற்கட்டமாக 5 உயர்நிலைப் பள்ளிகளிலும், 6 மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு லட்சம் வீதம் 11 பள்ளிகளில் பள்ளி வேலை நாட்களில் நடைபெற உள்ள காலை வழிபாட்டுக்கூடம் மற்றும் கலை நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவர்களால் இசைக்கக் கூடிய வகையில் இசைக்கருவிகள் வழங்க ரூபாய் 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக 70 தொடக்கப் பள்ளிகளிலும், 70 நடுநிலைப் பள்ளிகளிலும், பயின்று வரும் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எளிதாக்கவும் மகிழ்வுடன் உற்சாகமுடனும் கற்க கற்றல் உபகரணங்கள் வழங்க ரூபாய் 14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல்




2024-25 ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், எதிர்வரும் உடல் ரீதியான, மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கவும், மாமன்ற உறுப்பினர்களை தலைவர்களாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படும்.


சென்னை தொடக்க, நடுநிலை உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக நலனில் அவர் தம் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக அகற்றும் விழிப்புணர்வு வாரந்தோறும் வழங்கப்படும்.


சென்னை பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களிடையே கற்பனை திறன், படைப்பாற்றல், வாசிப்புத்திறன், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் பள்ளி நூலகங்களை இயக்கி வரும் பள்ளிகளுக்கு நூல் நூலகப்பள்ளி என்ற விருது பாராட்டு சான்றிதழாக வழங்கப்படும்.


நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களிடையே பாலின குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மேலும் மண்டலங்களான 1,2,7, 11, 12, 14 மற்றும் 15 லிருந்து இணைக்கப்பட்ட நடுநிலை,உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு மற்றும் 9ஆம்‌ வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களிடையே பாலின குழுக்கள் ஏற்படுத்த அப்பகுதிகளை சார்ந்த 49 பள்ளி ஆசிரியர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்