சென்னன: சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சி 2025-26 பட்ஜெட்டில் ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4,464 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ.681 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேயர் வெளியிட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
சென்னையில் இயங்கி வரும் பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப்பிரிவு அமைக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 இடங்களில் உணவு விற்பனை மண்டலங்கள் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி வசதிகள் செய்யப்படும். இதற்காக சென்னை பட்ஜெட்டில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் அமைக்கப்பட 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025-26ம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளிலுள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஜெனரேட்டர்கள் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025-26ம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூபாய் 3 கோடியிலிருந்து ரூ.4 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பைகளை கண்காணிக்க 400 கண்காணிப்பு கேமராக்கள் பெருத்துவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை அழகுபடுத்திட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு whatsapp அடிப்படையில் ஆன தகவல் தொடர்புகள் உருவாக்க ரூபாய் 4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி, IOCL,டோல்கேட், மாலிகிராமம் ஆகிய 4 இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்களை மேம்படுத்த 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினி பயிற்சிகள் ஆகியவை இலவசமாக வழங்கிட, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட, மண்டலம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூபாய் 3 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறி நாய் கடித்த நோய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்தப்படும்.
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}