சென்னை புத்தகக் கண்காட்சி 2025.. 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள்.. அறிவித்தது பபாசி!

Dec 23, 2024,07:05 PM IST

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள 48வது புத்தகக் கண்காட்சியின் போது ஆறு பேருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருது  வழங்கப்படும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.


சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு  சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தொடங்கும் இந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க இருக்கின்றனர். 


பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்தக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது,  பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கும் வழங்கப்படுகிறது


அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம் வருமாறு:


முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது




சிறந்த உரைநடைக்கான விருது-பேராசிரியர் அருணன் 

சிறந்த கவிதைக்கான விருது- நெல்லை ஜெயந்தா

சிறந்த நாவலுக்கான விருது-சுரேஷ் குமார் இந்திரஜித்

சிறந்த சிறுகதைக்கான விருது- என். ஸ்ரீராம்

சிறந்த நாடகத்துக்கான விருது- கலைராணி

சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது-நிர்மால்யா


கலைஞர் பொற்கிழி விருது பெறுவோருக்கு சான்றிதழுடன், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


பிற விருதுகள் விவரம்:


சிறந்த பதிப்பாளருக்கான  விருது - கற்பகம் புத்தகாலயம்

சிறந்த நூலகருக்கான விருது-டாக்டர்  கோதண்டராமன்

முத்தமிழ்க் கவிஞர் முனைவர் விருது - மணவை பொன்.மாணிக்கம்

சிறந்த தமிழறிஞருக்கான  விருது - முனைவர் சபா.அருணாச்சலம்

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான விருது - பெல் கோ

சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது - எழுத்தாளர் சங்கர சரவணன்

சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான  விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்

சிறந்த பெண் எழுத்தாளருக்கான  விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா

சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான விருது- மைந்தன் முத்தையா



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!

news

நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

news

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

news

Manmohan singh.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை!

news

எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்