போகி கொண்டாடிய மக்கள்.. சென்னையை சூழ்ந்த புகை.. மோசமான நிலைக்குப் போன AQI

Jan 14, 2024,05:09 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய கழிதலும் புதிய புகுதலும் என்பதை வரவேற்கும் வகையில் பழைய பொருட்களை தீவைத்து எரித்து மக்கள் போகியை கொண்டாடி தை மாதத்தை வரவேற்கின்றனர்.


போகியையொட்டி அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு தீவைத்து எரித்ததால் புகை சூழ்ந்து பல ஊர்களிலும் புகை மூட்டமாக இருந்தது. குறிப்பாக சென்னையில்  பனியுடன், கடும் புகை மூட்டமும் சூழ்ந்தது.




பொங்கல் பண்டிகை தொடங்கி விட்டது. இன்று முதல் நாளில் போகியை மக்கள் கொண்டாடினர். பழையவற்றை எரித்து புதியவற்றை இந்த நாளை மக்கள் கொண்டாடுவர். உண்மையில் இந்த நாள், மழைக்கு நன்றி சொல்லும் தினமாகும். உயிர்களுக்கு ஆதாரமாக திகழும் மழைக்கு நன்றி சொல்லி இந்த நாளை கொண்டாடி அடுத்து தைப் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள்.


இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களைப் போட்டு எரித்து போகியை கொண்டாடினர். போகியைச் சுற்றி வந்து ஆடியும், மேளம் முழங்கியபடியும் கடவுளை வணங்கி வழிபட்டனர். 




போகியால் கிளம்பிய புகை பல ஊர்களையும் சூழ்ந்திருந்தது. குறிப்பாக சென்னையில் ஏற்கனவே பனிமூட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது போகி புகையும் சேரவே, ஒரே புகை மூட்டமாக நகரே மூடிப் போய்க் கிடந்தது. சென்னை மற்றும் புறநகர்களில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புகைமூட்டமாக இருப்பதால் வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி  செல்லும் நிலை ஏற்பட்டது. 


சென்னையில் போகி புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைந்திருந்தது. சென்னையின் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு AQI மோசமாக இருந்தது. பெருங்குடியில்தான் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக 289 என்ற அளவில் இருந்தது. அதற்கடுத்து மணலியில் 272 என்ற அளவில் இருந்தது. அரும்பாக்கம் (216), காந்தி நகர் எண்ணூர் (232), ராயபுரம் (207)  என்ற அளவில் பதிவானது


புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்