சென்னையிலும், புறநகர்களிலும் டமால் டுமீல் மழை.. காற்று இடியுடன்.. மக்கள் செம ஹேப்பி!

Jul 12, 2024,09:40 PM IST

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு எட்டரை மணிக்கு மேல் நகரிலும் புறநகர்களிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.


தமிழ்நாட்டில் ஆங்காங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைக்கான மழை குறித்து தமிழ்நாடு வெதரமேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.


 


பகலில் நன்றாக வெயில் அடிக்கும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு நான் என்ன சொல்லணும்னு உங்களுக்கே தெரியும். இன்று மாலை அல்லது இரவில் வழக்கம் போல ஒரு டமால் டுமீல் காத்திருக்கிறது. இங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று பரவலாக நல்ல மழை இருக்கும்.


கேடிசிசி பெல்ட், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பெல்ட், சேலம் நாமக்கல் ஈரோடு பெல்ட்,  கொடைக்கானல் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பெல்ட், டெல்டா பெல்ட் ஆகியவற்றில் மழையை எதிர்பார்க்கலாம்.


அதேபோல நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், கூடலூர்  அவலாஞ்சி மற்றும் வால்பாறையில் பருவ மழை பிக்கப் ஆகும்.  அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ மழை வலுப்பெற்றுள்ளது.  வரும்நாட்களில் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இ்பபோதே கபிணி அணை உபரி நீர் மேட்டூருக்கு வர ஆரம்பித்து விட்டது. மாலையில் மீண்டும் சந்திக்கலாம் என்று கூறியிருந்தார் பிரதீப் ஜான்.


இந்த நிலையில் இரவு எட்டரை மணிக்கு மேல் சென்னையிலும் புறநகர்களிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் காற்றுடனும், இடியுடனும் கன மழையாக இருந்தது. சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையாக காணப்பட்டது. ராயப்பேட்டை, அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர்  என பல இடங்களிலும் மழை பெய்ததால் குளுமை குடியேறி மக்கள் ஹேப்பியானார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

அதிகம் பார்க்கும் செய்திகள்