விடிந்தது.. முடிந்தது Michaung.. வடியத் தொடங்கியது வெள்ளம்.. இயல்புக்குத் திரும்புகிறது சென்னை!

Dec 05, 2023,07:33 AM IST

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு சென்னையை கடந்த சில நாட்களாக கடந்த 2 நாட்களாக போட்டு உலுக்கிக் கொண்டிருந்த Michaung (மிச்சாங் அல்லது மிக்ஜாம்) புயல் தற்போது சென்னையை விட்டு அப்பால் போய் விட்டது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.


Michaung புயல் வரலாறு காணாத பாதிப்பை சென்னைக்கும், அதன் புறநகர்களுக்கும் ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இதுவரை மழையைப் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்தது வட தமிழ்நாடு. குறிப்பாக சென்னை.


கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் அளவுக்கு அதீதமான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. Michaung புயல் காரணமாக சென்னை நகரமே கடுமையாக ஸ்தம்பித்துப் போனது. ஒரே நேரத்தில் அப்ஸ்ட்ரீம் மற்றும் லோயர் ஸ்ட்ரீம் பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், தெருக்களிலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியதால் தண்ணீர் வடிய முடியாமல் திணறிப் போனது சென்னை.




கிட்டத்தட்ட 42 மணி நேரம் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. நேற்று நள்ளிரவு வாக்கில்தான்  மழை சற்று தணிந்து அமைதிக்குத் திரும்பியது சென்னை வானம். புயலானது நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதிக்கு ஷிப்டானதால் சென்னை தப்பியது.. தற்போது சுத்தமாக மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. நகரிலும், புறநகர்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. பல பகுதிகளில் இன்னும் வடியவில்லை.


புறநகர்களைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. மெல்ல மெல்ல நீர் வடிய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடிந்து விட்டது. தெருக்களில் நீர் முழுமையாக வடியவில்லை. புயல் தற்போது முழுமையாக விலகி விட்டதால் சென்னைக்கு இன்றைய காலை சற்று நிம்மதியாக விடிந்துள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்தால் இயல்பு நிலைக்கு சென்னையும் அதன் புறநகர்களும் திரும்பி விடும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்