சுவையான சப்பாத்திக்கள்ளி பழம்.. வாயெல்லாம் முள்ளு குத்திக் கிழிக்கும்.. ஆனாலும் விட மாட்டோம்ல!

Apr 10, 2024,05:24 PM IST

- பொன் லட்சுமி


"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா".. எவ்வளவு நிஜம், எத்தனை சத்தியம், எவ்வளவு உண்மை.. கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்த்து மெய் சிலிர்ப்போரை பெரிய லிஸ்ட்டே போடலாம்.. நாங்கெல்லாம் அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்தாலே காத தூரம் ஓடுவோர் பலர் உள்ளனர்.. ஆனால் அப்படிப்பட்டவர்களும் கூட கிராமத்து வாழ்க்கையை நிச்சயம் காதலிப்பவர்களாகவே இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.


இன்று கிராமத்திலேயே பலர் உணர்வுப்பூர்வமான கிராமத்து வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.. காரணம், பெருகி விட்ட நவீனம், நாகரீகம். அப்படி இருக்கையில் வெளிநாடுகளுக்கு, நகரங்களுக்கு இடம் பெயர்ந்தோர் மனசு அலைபாய்வதை எழுத்தில் வடிக்க முடியாது.


கிராமத்து வாழ்க்கையில் நாம் மறந்து போன இன்னொரு நினைவு.. இதுவும் ஒரு "பழம்" கதைதான்.. வாங்க பார்ப்போம்.


சப்பாத்திக் கள்ளி பழம்  :-




தண்ணீர் அதிகம்  இல்லாத வறண்ட நிலத்தில் கூட  இந்தச் செடி தட்டையாக  வட்ட வடிவத்தில் முட்கள் அதிகமாக நிறைந்து காணப்படும்... இதில் இரண்டு வகையான முட்கள் இருக்கும்  ஒன்று கூர்மையான பெரிய முள், இன்னொன்று சிறிய அளவிலான மெல்லிய முட்கள். இதன் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல் கொத்து கொத்தாக நிறைய முட்கள் இருக்கும். அதன் பூ மஞ்சள் நிறத்தில்  பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்..  அந்த நாட்களில் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழமாக இந்த சப்பாத்தி கள்ளி பழம் இருந்தது... இந்த பழத்தை செடியில் வைத்து பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும் ஆனால் பறிக்கப் போகும்போது தான் தெரியும்  அது எவ்வளவு பெரிய ரிஸ்க்குன்னு.


இந்த செடி பொதுவா ஊருக்கு ஒதுக்குப்புறமா  தரிசு நிலங்கள்ல தான் அதிகமா இருக்கும்.. விடுமுறை நாள்ல நண்பர்களோடு சேர்ந்து இந்த பழத்தை பறிக்கறதுக்கு போவோம்... பெரிய முள்ளு குத்தாம அந்த பழத்தை பறிக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது.. இந்த பழத்தை பறிக்கும் போது நிறைய தடவை  முள்ளு குத்தி  கைல கால்ல எல்லாம் ரத்தம் வந்திருக்கு.. அது போதாதுன்னு பழத்த பறிச்சு முடிச்சு பழத்தை சாப்பிடுவதற்கு முன்னாடி  அந்தப் பழத்துக்கு மேல இருக்கிற  குட்டி குட்டி முள்ளை எடுக்க  ஒரு பெரிய கல்லுக்கு மேல வச்சு முள்ளை எல்லாம் தேய்ப்போம்.. அப்புறம் அந்தத் தோலை எடுத்துட்டு  உள்ளே இருக்கிற விதைப்பகுதியை தான் சாப்பிடுவோம்.. அவ்வளவு டேஸ்டா இருக்கும்.


சில நேரத்துல முள் சரியாக போகாம வாயில எல்லாம் குத்திடும். அப்ப கூட அதை பெருசா எடுத்துக்காம  சாப்பிடறது மட்டும்தான் குறியா இருக்கும்... அந்த நாளை எல்லாம் நினைச்சு இப்போ பார்த்தா அவ்வளவு சந்தோசமா இருக்கு.. இப்போ எங்க கிராமத்துல கூட அந்த பழத்தை பார்க்க முடியல... அதை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. சின்ன வயசுல அந்த பழத்தை சாப்பிடும் போது அதுல எவ்வளவு மருத்துவ குணம் இருக்குன்னு எதுவுமே தெரியாது தெரியாமையே நிறைய சாப்பிட்டோம்.. ஆனா இப்போ சாப்பிடணும்னு நினைக்கும் போது கிடைக்க மாட்டேங்குது.


வெறும் டேஸ்ட் மட்டும் இல்லைங்க.. சப்பாத்திக்கள்ளி பழத்துல ஏகப்பட்ட சத்தும், மருத்துவ குணமும் பொதிஞ்சு கிடக்கு.. அதெல்லாம் இப்பத்தானே நமக்குத் தெரியுது. அதுல என்னென்ன இருக்கு தெரியுமா.!


மருத்துவ குணம்  :-




இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  இந்த பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.. இந்த பழம் அடிக்கடி சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் . வெயில் காலங்களில் இந்த பழத்தை சாப்பிடும் போது உடம்புக்கு புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.. செரிமான பிரச்சனை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த பழம்  மிகப் பெரும் அருமருந்து.


பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி, கர்ப்பப்பையில் ஏற்படும்  நீர்கட்டிகள்  போன்றவற்றை தடுக்க வல்ல  மருந்து இப்பழத்தில் உள்ளது.. அது மட்டுமல்லாது கருச்சிதைவு ஏற்படாமலும் தடுக்கும்.


இன்றைய காலத்தில் திருமணம் ஆன ஆண்கள் பெண்கள் முக்கியமாக சந்திக்கும் பிரச்சினை குழந்தையின்மை தான்.. அதற்கு மிகப்பெரும் அருமருந்து இந்த பழம்.. ஆண்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உயிரணுக்கள்  ஆரோக்கியமாக அதிகமாக வளரும், அதேபோல பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கருப்பை பிரச்சினைகள் சரி ஆகும்.


இன்றைய காலத்தில் எத்தனையோ பேர் குழந்தையின்மைக்காக  கோவில் மருத்துவமனை என்று அலைகிறார்கள்.. அவர்களுக்காகவே வரமாக வந்தது தான் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம்... இன்றும் ஒரு சில  கிராமங்களிலும், நகர்புறங்களில்  கடைகளிலும் இந்த பழம் கிடைக்கிறது... லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவமனை அலைவதை  விட இயற்கையாக கிடைக்கும் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.. உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்  உங்கள் வம்சமும் விருத்தி ஆகும்.


இன்னும் என்ன யோசிக்கிறீங்க அதுவும் வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு.  ஆயிரக்கணக்கா  மருத்துவமனைக்கு கொண்டு கொடுக்கிறது விட்டுட்டு  இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பழத்தை   வாங்கி சாப்பிடுங்க... உங்க உடம்பையும் குளிர்ச்சியாக்குங்க, உங்க ஆரோக்கியத்தையும் வளமாக்குங்க.


(குறிப்பு: உடல் நல பிரச்சினை உள்ளவர்கள், உரிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்