"நேர்மையாளர் டூ அணி தாவி".. அடுத்தடுத்து கூட்டணி தாவுவதில் வரலாறு படைக்கும் நிதீஷ் குமார்!

Jan 26, 2024,06:13 PM IST

பாட்னா: நேர்மையான தலைவர் என்ற பெயருடன் வலம் வந்தவர் நிதீஷ் குமார். ஆனால் அவரது தடுமாற்றமான செயல்பாடுகள், அடிக்கடி கூட்டணியை மாற்றுவது போன்ற காரணத்தால் அவரது பெயர் தற்போது "அணி தாவி" என்ற அளவுக்கு இறங்கிப் போய் விட்டது என்பதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.


நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர்தான் நிதீஷ் குமார். பல முக்கியமான தேசியத் தலைவர்களைக் கொடுத்த பீகாரைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவரான நிதீஷ் குமார் அந்தக் கட்சி உடைந்து புதுப்பு புதுக் கட்சிகள் உருவெடுத்தபோது அதில் இணைந்து பயணித்து வருபவர்.




தற்போது ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்து வரும் நிதீஷ் குமார்  தற்போது தான் இருந்து வரும் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையத் திட்டமிட்டுள்ளார்.


நிதீஷ் குமார் அணி மாறுவது இது முதல் முறையல்ல. அடிக்கடி இதைச் செய்து வருகிறார் நிதீஷ் குமார். இவர் என்ன செய்வார், எப்படிப் பேசுவார்,  நாளைக்கு கூட்டணியை மாற்றி விடுவாரா என்ற அளவுக்குத்தான் நிலையில்லாத ஒரு தலைவராக மாறிப் போயிருக்கிறார், நம்பகமில்லாத தலைவராகவும் மாறியிருக்கிறார்.


2013ம் ஆண்டுதான் முதல் முறையாக அணி மாற்றத்தை தொடங்கினார் நிதீஷ் குமார். 17 வருடமாக பாஜகவுடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார். நரந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்தார் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 




2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது, பீகாரிலும் ஐக்கிய ஜனதாதளம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளத்தின் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஜித்தன் ராம் மஞ்சியிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார்.  அதன் பிறகு அடுத்து 2015ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.  இந்தத் தேர்தலுக்குப் பின்னர் நிதீஷ் குமார் முதல்வரானார், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார்.


2016ம் ஆண்டு மீண்டும் பாஜக பக்கம் தனது ஆதரவைத் திருப்பினார் நிதீஷ் குமார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பேசினார் நிதீஷ் குமார். இந்த சமயத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து தேஜஸ்வியை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்தினார் நிதீஷ் குமார். ஆனால் அதற்கு அவரும், லாலுவும் மறுக்கவே, கூட்டணியை உதறினார் நிதீஷ் குமார். முதல்வர் பதவியை விட்டு விலகி பாஜகவுடன் அணி சேர்ந்து மீண்டும் முதல்வரானார். பாஜக சார்பில் 2 துணை முதல்வர்கள் பதவியேற்றனர்.


இதையடுத்து 2022ம் ஆண்டு பாஜகவுடன் மீண்டும் மோதல் மூண்டது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியை முறித்து விட்டு மீண்டும் லாலு பிரசாத் யாதவுடன் கை கோர்த்தார் நிதீஷ் குமார். தற்போதைய சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். நிதீஷ் குமார் கட்சிக்கு 45 பேர் உள்ளனர். பாஜகவுக்கு 82 பேர் உள்ளனர்.  பாஜகவுடன் அணி சேர்ந்து மீண்டும் முதல்வராக தொடரவுள்ளார் நிதீஷ்குமார். 2025ம் ஆண்டு பீகார் சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளது. அதுவரை நிதீஷ் குமாரையே பதவியில் தொடர பாஜக சம்மதித்துள்ளதாம். அதன் பிறகு இருகட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனவாம்.




பீகாரில் 40 லோக்சபா தொகுதிகள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலை நிதீஷ் குமாருடன் இணைந்துதான் பாஜக சந்தித்தது. இந்தக் கூட்டணிக்கு 33 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.  6 தொகுதிகளை ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்குக் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம். இந்த முறையும் இதேபோல பெரிய வெற்றியைப் பெறும் நோக்கில்தான் நிதீஷ் குமாரை மீண்டும் தங்கள் பக்கம் பாஜக இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.


2024 லோக்சபா தேர்தல் இருக்கட்டும், 2025ம் ஆண்டுக்குள் வேறு எங்காவது தாவுவாரா நிதீஷ்குமார் என்று தெரியவில்லை!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்