சில்க் ஸ்மிதா.. வசீகரிக்கும் கனவுக் கன்னியின் நிஜக் கதையை உயிர்ப்பிக்க வரும்.. சந்திரிகா ரவி

Dec 02, 2024,01:02 PM IST

சென்னை: ஆந்திராவில் பிறந்து அகில இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு மீண்டும் படமாகவுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான தமிழ் வம்சாவளி நடிகை சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கவுள்ளார்.


மறைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் உயிருடன் இருந்திருந்தால் தனது 64வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். ஆந்திர மாநிலம் காவாலி என்ற ஊரில் விஜயலட்சுமியாக பிறந்தவர், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் என்ற பெயரில் உருமாறி குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்றார். எப்படி இளையராஜா இல்லாமல் அப்போது படங்கள் வருவது அரிதோ அதுபோலத்தான் சில்க் இல்லாத படத்தைப் பார்ப்பதே அரிதாகும்.




தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சில்க் ஸ்மிதாவுக்கு பெரும் கிராக்கி இருந்தது. அவரது நடனம் இடம் பெறாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிசியாக இருந்து வந்தவர். அத்தனை முன்னணி சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்தவர். வித்தியாசமான படங்களிலும் நடித்து தனக்கு நடனம் மட்டுமல்ல, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்த அருமையான நடிகை.


ஜஸ்ட் 35 வயதில்  தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணம் ரசிகர்களை கலங்கடித்தது. எத்தனையோ சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் அவரது மறைவுக்கு அவர்கள் யாருமே வரவில்லை. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பெரிய அளவில் சினிமாவாக வந்தது இல்லை. வித்யா பாலன் நடிக்க டர்ட்டி பிக்சர்ஸ் என்ற ஒரு படம் மட்டுமே வந்துள்ளது. 


இந்த நிலையில் சில்க் ஸ்மிதா என்ற பெயரிலேயே இப்போது ஒரு புதிய படம் வரவிருக்கிறது. STRI சினிமாஸ் இந்தப் படத்தை உருவாக்கவுள்ளது.  சில்க் ஸ்மிதா – Queen of the South என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் வேடத்தில் நடிக்கவுள்ளார்.




ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், எஸ்.பி. விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் படங்களை அதிக அளவில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமான நடிகை சந்திரிகா ரவி, தெலுங்கில் சில படங்களில் நடனமாடியுள்ளார். என்டிஆர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படத்தில் ஒரு குத்துப் பாட்டு ஆடியுள்ளார். இப்போது சில்க் ஸ்மிதா அவதாரமெடுக்கவுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

news

Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

news

Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!

news

Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!

news

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்