பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தை நெருங்கி விட்டது. நிலவில் தரையிறங்கும் கடைசி நேர நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் நிலவின் நிலப்பரப்பு தொடர்பான புதிய புகைப்படங்களையும் சந்திரயான் 3 அனுப்பியுள்ளது.
இந்தியாவின் 3வது நிலவுத் திட்டமான சந்திரயான் 3, வெற்றிகரமாக நிலவை நெருங்கி விட்டது. தற்போது தனது இறுதிக் கட்டமான நிலவில் தரையிறங்குதலுக்காக காத்திருக்கிறது. அதுதொடர்பான கடைசி நேர நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
மணிக்கு 6000 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது சென்று கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் லேன்டர், நிலவின் தரைப்பரப்பிலிருந்து பத்து மீட்டர் தொலைவுக்கு வந்ததும் அதன் ராக்கெட்டுகள் அணைக்கப்பட்டு, அதன் வேகம் பூஜ்யமாக்கப்பட்ட பின்னர் நிலவின் தரையில் குதித்துக் கால் பதிக்கும்.
தற்போது படுக்கை வசமாக சென்று கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தரைப்பரப்பிலிருந்து 100 மீட்டர் உயரம் வந்ததும் 90 டிகிரி அளவுக்கு நேராகி விடும். அதன் பின்னர் தரைப்பரப்பை நோக்கிய பயணம் தொடங்கும்.
சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவது பல கட்டமாக செயல்படுத்தப்படும். சந்திரயான் விண்கலத்தின் லேன்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும். இதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டுகள் படிப்படியாக இயக்கப்படும். ராக்கெட்டுகள் இயக்கப்படுவதால் அதன் வேகம் மட்டுப்படும். 100 மீட்டர் உயரத்தை தொட்டதும், நிலவின் கீழ்ப் பரப்பில் தனக்கு தோதான சூழல்கள் இருக்கிறதா என்பதை லேன்டர் ஸ்கேன் செய்யும். இதற்காக பிரத்யேக புகைப்படக் கருவிகள், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிலவில் பள்ளமான, குழிகளுடன் கூடிய, குன்றுகளுடன் கூடிய இடங்கள் இருக்கிறதா என்பதை இந்த ஸ்கேனர்கள் ஆராயும். சரியான, பாதுகாப்பான இடத்தைக் கண்டறிந்ததும் அந்த இடத்துக்கு மேலே லேன்டர் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் மெதுவாக கீழ் நோக்கி லேன்டர் இயக்கப்படும். 10 மீட்டர் தொலைவு வந்ததும் ராக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு லேன்டர் நிலவின் தரையில் இறங்கும். தாயின் மடியிலிருந்து குழந்தை எப்படி தரையில் குதிக்குமோ.. அதே போலத்தான் லேன்டரும், நிலவின் தரையில் விழும்.
விழும்போது மிகவும் பாதுகாப்பான முறையில் லேன்டர் இருக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன. லேன்டர் பத்திரமாக தரையைத் தொட்டதும், அதற்கு அடுத்த 2 மணி நேரம் கழித்து உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் வெளியே வரும். அதன் பின்னர் ஆய்வுகள் தொடங்கும்.
இதற்கிடையே, நிலவின் தென் துருவம் குறித்த புதிய புகைப்படங்களை சந்திரயான் 3 அனுப்பி வைத்துள்ளது. நிலவின் பிரபலமான பல்வேறு பள்ளங்கள் இதில் காணப்படுகின்றன. இவை பூமியிலிருந்து காண முடியாதவை. அதாவது நிலவின் அந்தப் பக்கம் இருப்பவை. இவற்றை நாம் நிலாவுக்கே போய்த்தான் பார்க்க முடியும். விக்ரம் லேன்டர் இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. ஹேயன், பாஸ் எல், மாரே ஹம்போல்டியானம், பெல் கோவிச் ஆகிய பள்ளப் பகுதிகள் இதில் காணப்படுகின்றன.
வருகிற புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் காலெடுத்து வைக்க சந்திரயான் 3 திட்டமிடப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணையும். சர்வதேச அளவில் இந்த மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் காலெடுத்து வைத்துள்ளன. இதில் அமெரிக்கா மட்டுமே மனிதர்களை அனுப்பிய ஒரே நாடாகவும் திகழ்கிறது.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}