அந்த 20 நிமிடங்கள்.. நிலவை நெருங்கும் சந்திரயான்.. திக் திக் நொடிகள்!

Aug 22, 2023,03:44 PM IST
டெல்லி: சந்திரயான் 3 விண்கலம் மிக மிக முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நிலவைத் தொடுவதற்கு முன்பு சுமார் 20 நிமிட நேரம்தான் மிக மிக முக்கியமானது என்பதால் விஞ்ஞானிகள் திக் திக் மன நிலையில்தான் இருந்து வருகிறார்கள்.

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேன்டர், நாளை இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் கால் பதிக்கவுள்ளது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக போய்க் கொண்டிருப்பதாக சந்திரயான் 3 திட்டத்தின் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.



இதுவரை நிலவில் காலடி எடுத்து வைத்த நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை மட்டுமே உள்ளன. இந்த வரிசையில் இணைய இந்தியாவும் தற்போது மும்முரமாகியுள்ளது. அந்தக் கனவு நனவாகும் நாளும் நெருங்கி விட்டது.. நாளை கிளைமேக்ஸ்.. அந்த நிமிடத்துக்காகத்தான் ஒட்டுமொத்த தேசம் காத்திருக்கிறது.

நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேன்டர் வெற்றிகரமகா இறங்கியவுடன், அடுத்த  2 மணி நேரம் கழித்து அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவர் வெளியே வரும். இதுதான் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.  நிலவின் தென் துருவப் பகுதியில்தான் விக்ரம் லேன்டர் தரையிறங்கவுள்ளது.

இந்த தரமான சம்பவத்தில், சுமார் 20 நிமிட நேரம்தான் மிக மிக முக்கியமானது. இந்த இருபது நிமிட காலத்தில் நடைபெறப் போகும் அத்தனையும் மிக மிக கிரிட்டிகல் ஆனவை. இந்த நிமிடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டால், நமது நிலவுப் பயணம் வெற்றி அடைந்து விடும்.

அந்த 20 நிமிடங்களையும் நாம் உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை சந்திக்கும்போது என்ன மன நிலையில் இருப்போமோ அதற்கு ஈடாக கற்பனை செய்து கொள்ளலாம். கடைசி 6 பந்தில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா இருந்தால் எப்படி இருக்கும்.. அப்படிப்பட்ட நிலையில்தான் நாளை சந்திரயான் விண்கலத்தின் கடைசி 20 நிமிடங்கள் இருக்கப் போகிறது.

நிலவிலிருந்து 25 கிலோமீட்டர் உயரத்தில் விக்ரம் லேன்டர் இருக்கும்போது பெங்களூர் இஸ்ரோ மையத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு அதற்கேற்ப விக்ரம் லேன்டர் செயல்படத் தொடங்கும். அதாவது நிலவை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். விநாடிக்கு 1.68 கிலோமீட்டர் என்ற வேகத்தில் லேன்டர் நகர ஆரம்பிக்கும். அதன் பின்னர் அதில் உள்ள என்ஜின் பூஸ்டர்கள் செயல்பட ஆரம்பிக்கும். இதனால் லேன்டரின் வேகம் குறையும். இந்த நிமிடம் வரை லேன்டர் படுக்கை வசமாகவே சென்று கொண்டிருக்கும்.

அதன் பின்னர் லேன்டர் வெர்ட்டிகல் பொசிசனுக்கு மாற்றப்படும். இப்படி மாற்றிய பிறகுதான் சந்திரயான் 2 விண்கலத்தின் லேன்டரானது பூமியுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு நிலவில் போய் விழுந்தது. எனவே இந்த முறை அதில் தவறு நடந்து விடாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்த கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட வேண்டும் என்பதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பிரார்த்தனையாக உள்ளது.

நிலவின் தரைப் பரப்பிலிருந்து 800 மீட்டர் தொலைவுக்கு லேன்டர் வந்த பிறகு அதன் வேகம் ஜீரோவாக மாற்றப்படும்.  அதன் பின்னர் நிலவின் தரைப்பரப்பு தரையிறங்குவதற்கு சரியாக இருக்கிறதா, நமக்கு பொருத்தமான இடம் எது என்பதை லேன்டர் ஆராயும். இதற்காக புகைப்படங்கள் எடுக்கும்வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பொருத்தமான புகைப்படம் கிடைத்தவுடன் அந்த இடத்தை முடிவு செய்து அங்கு தரையிறங்கும் முஸ்தீபுகள் தொடங்கும்.

பின்னர் மேலும் இறங்கி 150 மீட்டர் தூரத்திற்கு வந்து நிற்கும் லேன்டர்.  மீண்டும் தோதான இடம் எது என்ற ஆய்வு தொடங்கும். புகைப்படங்களை ஆய்வு செய்து லேன்ட் ஆகக் கூடிய இடத்தை லேன்டர் தேர்வு செய்யும். இதற்காக ஏஐ டெக்னாலஜியும் பயன்படுத்தப்படுகிறது. சரியான இடம் தேர்வு செய்யப்பட்டதும், லேன்டரில் இணைக்கப்பட்டுள்ள பூஸ்டர் என்ஜின்கள் ஆஃப் செய்யப்படும். அதைத் தொடர்ந்து லேன்டர் நிலவின் தரையில் போய் விழும். அதாவது அதன் கால் பகுதி நிலவில் போய்ப் பதியும். அப்படி விழும்போது அதன் வேகம் மணிக்கு 10.8 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும்.

மேற்கண்ட அனைத்து செயல்களும் நடைபெற 20 நிமிடங்கள் பிடிக்கும். இந்த இருபது நிமிடங்கள்தான் மிக மிக முக்கியமானது என்பதால் இந்த 20 நிமிடங்கள் மீதுதான் அனைவரின் கண்களும் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்