நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திரயான் 3!

Aug 05, 2023,07:55 PM IST

டெல்லி: நிலவின் சுற்றுப் பாதையில் இன்று இரவு சரியாக 7 மணியளவில் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம்.  நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


இந்தியாவின் நிலவுப் பயணம் முக்கிய மைல்கல்லை இன்று இரவு எட்டியுள்ளது. ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.




ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு சரியாக 7 மணியளவில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவில் தரையிறங்கும் தருணத்தை சந்திரயான் 3 விண்கலம் நெருங்கியிருப்பது இந்தியர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.


சந்திரயான் விண்கலத்தில் விக்ரம் என்ற லேன்டரும், பிரக்யான் என்ற ரோவரும் பொருத்தப்பட்டுள்ளன. 

சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கும் லேன்டருக்குப் பெயர்தான் விக்ரம். இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதன் எடை 1749 கிலோவாகும்.


பிரக்யான் என்பது ரோபோட்டிக் வாகனம் (ரோவர்) ஆகும். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனமானது நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வுகளில் ஈடுபடும். இந்த வாகனத்திற்கு 6 சக்கரங்கள் உள்ளன. எல்லாப் பக்கமும் திரும்பும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனம் 26  கிலோ எடை கொண்டதாகும்.


சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருப்பதை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து நிலவில் சந்திரயான் 3 காலெடுத்து வைக்கும் நன்னாளை நோக்கி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Parliament: 2வது நாளாக இன்றும் அமளி துமளி முழக்கம்.. நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

news

சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!

news

தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!

news

Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

news

கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்