ஹைதராபாத்: தெலுங்கு தேசம் தலைவரும், மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உதவிக் கரம் நீட்டியுள்ளவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ. 535 கோடி அதிகரித்துள்ளது.
நர புவனேஸ்வரி ஹெரிட்டேஜ் புட்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டராக இருக்கிறார். இதை நிறுவியவர் சந்திரபாபு நாயுடுதான். கடந்த ஐந்து நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகளும் மதிப்பும் உயர்ந்து வந்தது. இதனால் நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ. 535 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளார். மத்தியிலும் அவர் கிங் மேக்கராக உருவாகியுள்ளார். இதனால் ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 55 சதவீத அளவுக்கு பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாம். ஜூன் 3ம் தேதி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 424 ஆக இருந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு இந்த விலை. இப்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 661.25 என உயர்ந்து உள்ளது.
1992ம் ஆண்டு ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார் நாயுடு. பால் மற்றும் பாால் பொருட்கள் உள்ளிட்டவற்றை இது தயாரித்து விற்கிறது ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா, டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் வரை இந்த நிறுவனத்தின் பிசினஸ் நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் நர புவனேஸ்வரிதான் முன்னணி பங்குதாரர் ஆவார். இவரிடம் 2,26,11,525 பங்குகள் உள்ளன. நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு 1,00,37,453 பங்குகள் உள்ளன. நர லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ. 237.8 கோடி உயர்ந்துள்ளதாம்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}