தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Feb 02, 2024,06:18 PM IST

 சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் நேற்று முதல் ஒரு சில இடங்களில் திடீர் மழை செய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் திடீர் மழையால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல்  தஞ்சை மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், இன்றைய வானிலை மைய தகவலின் படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத் தில் இன்றும், நாளையும்  இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.




மேலும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


 உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


பிப்ரவரி 3ம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


பிப். 3மற்றும் 4ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த வானிலை அறிவிப்பால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

அதிகம் பார்க்கும் செய்திகள்