துபாய்: பாகிஸ்தான் அணியை இந்தியா பிரமாதமாக வென்று விட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு நாம் முன்னேற சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நாம் தாண்டியாக வேண்டிய நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. முதலில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 போட்டிகளிலும் தோற்றதால், தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.
இந்தியா அரை இறுதிக்குத் தற்போது தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இதில் உறுதி இல்லை. காரணம் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து இதில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

இந்தியா தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணியைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல வங்கதேசம் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (நியூசிலாந்து, பாகிஸ்தான்) உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசம் தனது 2 போட்டிகளிலும் வென்றால், இந்தியா அரை இறுதிக்கு நுழைவது சிக்கலாகி விடும்.
காரணம் அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கான அணிகள் தேர்வாகும். இதெல்லாம் நடக்காமல் இருக்க இந்தியா, தனது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று விட்டால் போதுமானது.
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
{{comments.comment}}