சாம்பியன்ஸ் டிராபி 2025.. வங்கதேசத்தை பந்தாடி.. முதல் வெற்றியை சுவைத்தது இந்தியா.. ஷமி, கில் செம!

Feb 20, 2025,06:42 PM IST

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியா தனது முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


வங்கதேசத்துடன் இன்று நடந்த மோதலில் அபாரமாக பந்து வீசி முதலில் கலக்கிய இந்தியா, பின்னர் பேட்டிங்கிலும் அட்டகாசமாக ஆடி வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


முன்னதாக, இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி போட்ட புயல் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 228 ரன்கலில் ஆட்டமிழந்தது வங்கதேச அணி. 48.4 ஓவர்களிலேயே வங்கதேச அணி ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.


ஷமி இன்றைய போட்டியில் ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட் சாதனையுடன் 200 விக்கெட்களைச் சாய்த்து புதிய  மைல்கல்லை எட்டினார். பின்னர் நடந்த சேசிங்கில் 47 ஓவர்களில் 4  விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது இந்தியா. சுப்மன் கில் அபாரமான சதம் போட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.




சுருக்கமான ஸ்கோர்:


வங்கதேசம் - 228 (48.4 ஓவர்கள்)


தெளஹீத் ஹிருதய் - 100

ஜாகேர் அலி - 68 


ஷமி – (5/53)

ஹர்ஷித் ராணா – (3/31)

அக்ஸர் பட்டேல் – (2/43)


இந்தியா - 231/4 (46.3 ஓவர்கள்)


சுப்மன் கில் - 101 (ஆட்டமிழக்கவில்லை)

கே.எல்.ராகுல் - 41 (ஆட்டமிழக்கவில்லை)

ரோஹித் சர்மா - 41




வங்கதேச அணியின் மோசமான பெர்பார்மன்ஸ்


முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம்  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அவர்களின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் விரைவில் அவுட் ஆகி, ஒரு கட்டத்தில் 35/5 என்ற அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.


ஷமி தனது முதல் விக்கெட்டாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்தோவை (8 ரன்கள்) அவுட் செய்தார். அக்ஸர் பட்டேல் தொடர்ந்து நல்ல வேகத்தில் பந்து வீசி மூன்று ஓவரில் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


ஷமி தனது 200வது ஒரு நாள் விக்கெட்டாக ஹொசைனை (0) கிளீன் போல்டு செய்து பெற்றார். 




வங்கதேச வீரர் தெளஹீத் தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி சதத்தை எடுத்ததுதான் வங்கதேச அணியின் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது. தெளஹீத், மிகவும் நிதானமாக விளையாடி 100 ரன்கள் அடித்து தனது முதல் சர்வதேச சதத்தை அடைந்தார். அவர் ஜாகேர் அலியுடன் (68 ரன்கள்)  சேர்ந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வங்கதேச அணியை ஓரளவுக்கு கெளரவமான நிலைக்குக் கொண்டு சென்றார். 


வங்கதேச அணி இந்த அளவுக்கு ரன் குவிக்க இந்திய வீரர்கள்தான் காரணம். ரோகித் சர்மா, ஜாகேர் அலியின் கேட்ச்சை கைநழுவ விட்டார். அதேபோல ஹர்திக் பாண்டியா தெளஹீத்தை கேட்ச் செய்ய தவறினார். இதனால்தான் வங்கதேச அணி இந்த அளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டியது. இல்லாவிட்டால் 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.


ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, வங்கதேச  அணியை குறைந்த ஸ்கோரில் முடிக்க உதவினார். அவர் முதல் ஸ்பெல்லிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 35/5 என்ற நிலைக்கு தள்ளினார். தொடர்ந்து ஜாகேர் அலியை LBW செய்து தனது நான்காவது விக்கெட்டை எடுத்தார். இறுதியாக தெளஹீத்தை அவுட் செய்து, ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தினார். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news

உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?

news

PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை

news

ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

news

ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்

news

Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!

news

கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!

news

உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

news

மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்