ராஞ்சி: கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளேன். என்னை அரசமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அக்கட்சி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான சாம்பாய் சோரன்.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அக்கட்சியின் சீனியர் லீடரான சாம்பாய் சோரன் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவே ஆளுநரை சந்தித்து தனக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடிதத்தையும் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார் சாம்பாய் சோரன்.
ஆனால் இதுவரை சாம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க உத்தரவிடவில்லை. இந்த நிலையில் இன்று மாலை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் சாம்பாய் சோரன். ஆனால் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சாம்பாய் சோரனுடன், 5 எம்எல்ஏக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஆளுநரை சந்தித்து உடனடியாக தங்களுக்கு ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்தையும் சாம்பாய் சோரன், ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்திாயளர்களிடம் சாம்பாய் சோரன் பேசுகையில், கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் குழப்பமான சூழல் எழுந்துள்ளது. ஆளுநரிடம் இதை எடுத்துக் கூறினோம். உடனடியாக அரசமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவரை வலியுறுத்தினோம்.
81 உறுப்பினர்கள் கொண்ட சபையில் எங்களுக்கு மெஜாரிட்டி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 47 பேரும் ஆட்சியமைக்க ஆதரவாக உள்ளனர். இது மெஜாரிட்டியை விட கூடுதலான நம்பர்தான். அனைவருமே இன்று என்னுடன் வந்தனர். ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை என்றார் சாம்பாய் சோரன்.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}