டெல்லி: தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கி பேரிடரை சந்தித்தது நமது மாநிலம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து ஊருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தன. பெரும் பொருட் சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு சந்தித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நாளை முதல் மத்திய குழு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ள பாதிப்பின்போதும் தமிழ்நாடு நிதியுதவி கோரியிருந்தது. பிரதமரையும், இதுதொடர்பாக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய குழு வருவதற்கு முன்பே கணிசமான தொகுதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}