சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வருகிறது ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழு.
வங்கக்கடலில் கடந்த 29ஆம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் அப்பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் உளுந்து, மக்காச்சோளம், கடலை, நெல், பன்னீர் கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்திருந்த விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் முழுவதும் அழுகி கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையுற்றனர். மேலும் இதனை சரி செய்ய உரிய நிவாரண வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 2000 ரூபாய் நிதி உதவியும் அளிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்ய 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்தார். அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்புமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகிறது.
மத்திய உள்துறை இணை செயலாளரான ராஜேஷ் குப்தா தலைமையில் டாக்டர் கே.பொன்னுசாமி, சோனா மணி ஹாபாம், ஆர்.சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கெட்டி, கே.எம் பாலாஜி ஆகியோர் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது.
சென்னை வரும் இந்த குழுவினர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் பிரிந்து சென்று நாளை ஆய்வு செய்ய உள்ளனர். இதன்பிறகு சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் மத்திய குழுவினர் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த புயல் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை குழு தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}