டெல்லி: அனைத்துப் பணியிடங்களிலும் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தின்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் அன்னபூர்னா தேவி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அவர் அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து மத்திய அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. அப்போது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் சமயத்தின்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படுமா என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் அன்னபூர்னா தேவி, மத்திய அரசிடம் அந்தத் திட்டம் இல்லை. பரிசீலனையிலும் அது இல்லை என்று அவர் கூறினார். முன்பு மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணியும் மாதவிடாய் சமயத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதை எதிர்த்துக் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். மாதவிடாய் என்பது ஊனமல்ல.. என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அப்போது ராஷ்டிரிய ஜனதாதளம் எம்பி மனோஜ் குமார் ஜா இதுகுறித்து கேட்டபோது, அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி பதிலளிக்கையில், மாதவிடாய் என்பது ஊனமல்ல. அதற்கு தனியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுக்கவும் அவசியம் இல்லை. பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் இது இயல்பான விஷயம். மாதவிடாய் விஷயத்தில் தனியாக கொள்கை முடிவடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போதைய புதிய அரசிடமும் மாதவிடாய் விடுமுறை குறித்த திட்டம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு நாடுகளில் மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் வழக்கமான விடுமுறைகளுடன் கூடுதலாக இந்த விடுமுறையும் பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஜப்பானில், மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு பணி கொடுக்காமல் இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவிலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தைவானில் வருடத்திற்கு 33 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறையை எடுக்க வசதி உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மாதத்திற்கு 3 முதல் 5 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறை அனுமதிக்கப்படுகிறது. ஜாம்பியா நாட்டில் மாதம் ஒரு முறை மாதவிடாய் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அந்த நாளை தாய்மார்கள் தினமாக அங்கு சொல்கிறார்கள். விடுமுறை கொடுக்க நிறுவன அதிகாரிகள் மறுத்தால் அவர்கள் மீது வழக்கே தொடர அங்கு சட்டத்தில் இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
{{comments.comment}}