சென்னை: அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் சென்சார் போர்டு மீதே புகார் அளிக்கும் நிலை வந்துள்ளது. லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் ஆதாரங்களுடன் மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்துள்ளார். அதனை உடனடியாக விசாரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் தமிழில் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்ததினால் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படம் இந்தியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு 2 தவனைகளில் ரூபாய் 6.5 லட்சம் தன்னிடம் இருந்து லஞ்சமாக அதிகாரிகள் பெற்றதாக இணையதளத்தில் வீடியோ ஒன்றை விஷால் வெளியிட்டு, மத்திய அரசிடம் விசாரணைக்கு கோரியிருந்தார்.
இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வெளியிட்ட வீடியோவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பையில் உள்ள சென்சார் போர்டை அணுகியபோது, அங்குள்ள அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், தானும் வேறு வழியின்றி அதனை 2 தவணைகளிலில் ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சமும் வங்கி கணக்கில் இருந்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
நிஜ வாழ்க்கையிலும் இது போன்று நடப்பதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், தான் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரம் குறித்த தகவல்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் விசாரணைக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் மும்பை சென்று சென்சார் போர்டு அதிகாரிகளிடம் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தவுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}