முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்.. இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு

Dec 28, 2024,10:34 AM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடல் ராஜ்காட் அருகே தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.


இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்கள், உயரிய தலைவர்களுக்கு அவர்களது உடல் அடக்கம் அல்லது தகனம் நடைபெறும் இடத்தில்தான் நினைவிடம் அமைக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கேவும்  பேசினார்.  மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.




இந்த நிலையில் மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்டிப்பாக நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கித் தரப்படும். அதுவரை இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஒரு புகழ் பெற்ற தலைவருக்கு உரிய நினைவிட இடத்தை முடிவு செய்வதில் இத்தனை தடுமாற்றம் ஏன். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால் காங்கிரஸ் இதில் அசிங்கமான அரசியல் செய்கிறது. அதை முதலில் காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பிறகு எப்படி நடத்தியது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியதை நாடு அறியும் என்று கூறியுள்ளது பாஜக.


இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

1 கிலோ பச்சரிசி.. 1 கிலோ சர்க்கரை.. கரும்பு.. பொங்கல் பரிசுத் தொகுப்பு ரெடி.. ஜன. 9 முதல் டோக்கன்!

news

அன்புமணியுடன் திடீர் மோதல்.. பேச்சைக் கேட்காட்டி வெளியேறி விடு.. கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!

news

பாமக மேடையில் வெடித்த திடீர் வாக்குவாதம்.. டாக்டர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு இதுதான் காரணமா?

news

Panaiyur Poltics: தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் பனையூர்... நேற்று விஜய்.. இன்று அன்புமணி

news

Anna university: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த.. ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவு

news

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அளிக்க ஹைகோர்ட் உத்தரவு

news

திருவண்ணாமலையில் கொடுமை.. முக்தி அடைவதற்காக.. விஷம் அருந்தி வாழ்க்கையை முடித்த 4 பேர்!

news

New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!

news

Dr Manmohan Singh.. மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கோனார் இறுதி அஞ்சலி.. டெல்லியில் உடல் தகனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்