டில்லி : நீண்ட கால காத்திருப்பு மற்றும் போராட்டத்திற்கு பிறகு சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ( அக்.,03) ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர் மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவை அமைக்கும் பணிகள் சென்னையில் 45 க்கும் அதிகமான இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மொத்தமாக ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7500 கோடி. இதனை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாதவரம் - சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (4-வது வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைய உள்ளன. 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
2ம் கட்ட மெட்ரோ பணிகள் 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக முழுழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த மூன்று வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிலோ மீட்டருக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், உயர்மட்ட பாதையில், 76 கிலோ மீட்டருக்கு, 80 ரயில் நிலையங்களும், இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனைகளும் அமைக்கபட்டு வருகின்றன.
இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்காக விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கேட்டு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் டில்லி சென்றும், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மூலமாகவும் வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் முதல்வர், டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போதும் கூட இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ திட்டத்தின் இரம்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் - முதல்வர் மகிழ்ச்சி
இதுகுறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். சென்னை மெட்ரோவின் 2வது கட்ட திட்டமானது சென்னை நகரின் வாழ்க்கைத் தரத்த்தை மேலும் மேம்படுத்தும். போக்குவரத்தை எளிதாக்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முறை நான் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது சென்னை மெட்ரோ 2வது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட காலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது. இந்ததத் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
{{comments.comment}}