புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களின் மூலமாக பரவி வருவது தான் ஜிகா வைரஸ். இந்த ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்டு 3 அல்லது 7 நாட்களுக்கு பிறகு தான் உடலில் அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இதுவரை இந்த நோய் தொற்றிற்கு எந்த வித தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்படவில்லை. முதன்முதலில் இந்த வைரஸ் 2016ம் ஆண்டு குஜராத்தில் கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அதிக ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். கொசுக்கடி மூலம் இந்நோய் பரவுவதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாத்து கொண்டால் இந்நோயில் இருந்து தப்பிக்கலாம். இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை தான் அதிகளவில் தாக்கும். கர்ப்பிணியை பாதிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் சிசுவம் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது மத்திய அரசு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் துறை இயக்குனர் அருள் கோயல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அதற்கு அருகில் உள்ள இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். இதில் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு கரு வளர்ச்சி கண்காணிக்கவும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஏடிஎஸ் கொசுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இதற்கான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}