பெங்களூரு: காவிரி விவகாரத்தை கர்நாடகா மீண்டும் அரசியலாக்க ஆரம்பித்துள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்றோர் தமிழர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்குள் நுழையக் கூடாது என்று வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. ஒவ்வொருமுறையும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. காவிரி நீரில், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பங்கு உள்ளது.
இதை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காவிரி நீர் ஆணையம் தெளிவாக வரையறுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் இதுகுறித்து பல முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் இதை கர்நாடகம் பின்பற்றுவதில்தான் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது. இப்போது மீண்டும் காவிரி தொடர்பாக பிரச்சினை வெடித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் கர்நாடக அரசு இதனை ஏற்கவில்லை. இரு மாநிலங்களையும் அழைத்து பேசிய காவிரி மேலாண்மை வாரியம் விநாடிக்கு 5000 கன அடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. அதையும் கர்நாடகா ஏற்கவில்லை. பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குப் போனது. அங்கும் அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சரி என்று கூறி பின்பற்ற உத்தரவிட்டது. ஆனால் அதை கர்நாடகா பின்பற்றவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு கன்னட அமைப்புகளும் இதில் இறங்கியுள்ளன. இதில் கன்னட சாளுவாளி அமைப்பும் குதித்துள்ளது. இந்த அமைப்பு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதில் முன்னால் வந்து நிற்கும். இதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். தமிழ், தமிழர் வெறுப்புணர்வுக்குப் பெயர் போனவர் இவர்.
காவிரி விவகாரம் குறித்த எந்த பிரச்சனை ஆனாலும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்களின் நலனுக்கு எதிராகவும் மிரட்டும் வகையில் பேசுவது வழக்கம். இப்போதும் அவர் மிரட்டியுள்ளார். அவர் கூறுகையில், ரஜினிகாந்த் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்கிறாரா அல்லது கர்நாடகத்தின் பக்கம் இருக்கிறாரா என்பதை விளக்க வேண்டும். அவர் கர்நாடகத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டால் கர்நாடகத்துக்குள் வரக் கூடாது. அவரது திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடகத்தில் ஓட முடியாது என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ் குமார் நடித்திருந்தார். அவருக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. காவிரி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இரு மாநில தலைவர்களும் பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும். ஏனென்றால் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது . அதனால் இரு மாநிலங்களும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}