Cauvery Issue.. அனைத்துக் கட்சி எம்.பிக்களுடன் மத்திய அரசிடம் முறையிட திமுக முடிவு

Sep 16, 2023,05:18 PM IST

சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்தி நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அனைத்துக் கட்சி எம்.பிக்களுடன் இணைந்து சந்தித்து முறையிட திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் அக்கூட்டத்தில் எப்படிச் செயல்படுவது என்றும் எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கூட்டணிக் கட்சிகள் சார்பில் முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.


காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து கர்நாடகா தவறான தகவல்களை மத்திய அரசுக்கு அளித்து வருகிறது. இந்த பொய்த் தகவல்களை மத்திய அரசு நம்பக் கூடாது என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார். அனைத்துக் கட்சி எம்.பிக்களை இணைத்து குழுவாக சென்று அமைச்சரை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக அளிக்கவும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


நீட் விலக்கு மசோதா தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இது குலத் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம். இதை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் இதர  பொதுப் பிரச்சினைகள் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்களோடு இணைந்து திமுக தொடர்ந்து உரத்துக் குரல் கொடுக்கும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்