சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். டாக்டர் பாலாஜுக்கு தலை, காது முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்து விழுந்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறறார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன். அவரது தாயார் பிரேமாவுக்கு அங்கு புற்றுநோய் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை சரியில்லை என்று கருதியதாலும், தனது தாயாருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட டாக்டர் பாலாஜியின் தவறான சிகிச்சைதான் காரணம் என்றும் விக்னேஷ்வரன் கருதியுள்ளார். அதுதொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ்வரன் கத்தியால் குத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இடம் போர்க்களம் போலக் காணப்படுகிறது. அந்த இடமே ரத்த வெள்ளமாக காணப்பட்டது. மிகவும் மோசமாக கத்தியால் குத்தியுள்ளார் விக்னேஷ்வரன். 7 இடங்களில் டாக்டருக்கு குத்து விழுந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
தற்போது விக்னேஷ்வரன் மீது கிண்டி போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உதவி பேராசிரியர் டாக்டர் சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2 கீழடுக்கு சுழற்சிகள்.. இன்றும் நாளையும் பரவலான கன மழையை எதிர்பார்க்கலாம்.. வானிலை மையம்
நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவாரா.. முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச்!
மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.. பிரேமலதா விஜயகாந்த்
அரசு மருத்துவமனைகளில்.. நோயாளிகளுக்கு டேக் முறை அமல்.. மெட்டல் டிடெக்டர் சோதனையும் அறிமுகம்!
Palli vilum palan: ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் .. கேட்டால்.. என்ன பலன் தெரியுமா?
தமிழ் கல்வெட்டுக்களை மைசூருக்கு மாற்ற திரைமறைவுப் பணிகள்.. சு. வெங்கடேசன் எம்.பி புகார்
மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு... நோய்கள் பரவும்... இதெல்லாம் பாலோ பண்ணுங்க.. சுகாதாரத்துறை அலர்ட்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. தோள்பட்டையில் ஆபரேஷன்
வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}