"உன்னை மறக்க முடியாது நண்பா".. மாத்யூ பெர்ரி மறைவுக்கு.. ஜஸ்டின் ட்ரூடியோ இரங்கல்

Oct 29, 2023,09:58 PM IST

டோரன்டோ: நடிகர் மாத்யூ பெர்ரியின் மறைவுக்கு கனடா பிரமர் ஜஸ்டின் ட்ரூடியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.


இருவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாத்யூ பெர்ரியின் தாயார் சூசன் மாரிசன், ஜஸ்டினின் தந்தை பியர்ரி ட்ரூடியோ பிரதமராக இருந்தபோது அவரது பிரஸ் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டினும், மாத்யூவும் தொடக்கப் பள்ளிப்படிப்பை இணைந்து படித்தவர்கள். நீண்ட காலத் தோழர்கள். 


தனது நண்பன் மாத்யூ மறைவு குறித்து ஜஸ்டின் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஜஸ்டின் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:




மாத்யூ பெர்ரியின் மரணம் அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது. சோகமாக உணர்கிறேன். பால்ய காலத்தில் பள்ளி வளாகத்தில் நாங்கல் இருவரும் விளையாடிய விளையாட்டுகள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அவரை அறிந்த யாருமே அவர் கொடுத்த அந்த சந்தோஷத்தையும், சிரிப்பையும் அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டார்கள். அவரை நிறைய மிஸ் செய்வார்கள். நீ கொடுத்த சிரிப்புகளுக்கு நன்றி மாத்யூ. நீ அனைவராலும் நேசிக்கப்பட்டாய்..  உன்னை நாங்கள் நிச்சயம் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார் ஜஸ்டின்.


ஜஸ்டினை அடித்த மாத்யூ பெர்ரி


ஜஸ்டின் குறித்து 2017ம் ஆண்டு ஒரு பேட்டியின்போது சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார் மாத்யூ பெர்ரி. அப்போது அவர் கூறுகையில், அப்போது நானும், ஜஸ்டினும் 5வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். அப்போது  எனக்கும், எனது நண்பன் ஒருவருக்கும் ஜஸ்டின் மீது பொறாமை இருந்தது. காரணம், எங்களால் சரியாக விளையாட முடியாத ஒரு விளையாட்டில் ஜஸ்டின் சூப்பர் திறமையுடன் இருந்தால். இதனால் நானும் எனது நண்பனும் சேர்ந்து ஜஸ்டினை அடித்து விட்டோம்.


அப்போது ஜஸ்டின் மிகவும் மென்மையானவனாக இருந்தார். இதனால் அவரை எளிதாக அடித்து விட்டோம். அதற்காக இப்போது வருந்துகிறேன்.. அதை நான் செய்திருக்கக் கூடாது. மோசமான பையனாக நான் இருந்துள்ளேன் என்று கூறியிருந்தார் மாத்யூ பெர்ரி. கனடாவின் பிரதமராக ஜஸ்டின் உயர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு இது கனவாக இருந்தது. என்னிடம் அடிக்கடி நான் கனடாவின் பிரதமராவேன் என்று கூறிக் கொண்டே இருப்பார். நான் அவரை நிறைய ஊக்குவித்தேன் என்று கூறியிருந்தார் மாத்யூ பெர்ரி.


பிரண்ட்ஸ் டிவி தொடரின் முக்கிய நடிகரான மாத்யூ பெர்ரி தனது 54வது வயதில் பாத் டப்பில் பிணமான நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரண்ட்ஸ் தொடர் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்