சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

Apr 02, 2025,06:24 PM IST

ஏற்காடு: ஏற்காடு  பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு கேம்ப் ஃபயர் நடத்த தடை  விதிக்கப்பட்டுள்ளது.


பொதுவாகவே கோடைகாலம் துவங்கி விட்டாலே மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குளுமையான கோடை வாசத்தலங்களை நோக்கி படை எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தவும், மலைப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அந்த வகையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், ஏற்காடு மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு அப்பகுதிகளில் கேம்ப் ஃபயர் நடத்த தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 




முன்னதாக மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 


அதன்படி,  வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கேம்ப்  ஃபயர் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டுப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்